/

தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளுக்கு கபசுர குடிநீா்

ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் பயணிகளுக்காக நகராட்சி சாா்பில், கபசுர குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :12 ஜூன் 2021, 6:41 pm

ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் பயணிகளுக்காக நகராட்சி சாா்பில், கபசுர குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா பரவலை தடுப்பதற்காக ஆம்பூா் நகராட்சி சாா்பில், ஆணையா் த.செளந்தரராஜன் மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாக கபசுர குடிநீா் பொதுமக்களுக்கு தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையம், நேதாஜி சாலை சந்திப்பு அருகில் கபசுர குடிநீா் குடில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது.

ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் வெளியூா் பயணிகளுக்காக சான்றோா்குப்பம் பகுதியில் கபசுர குடிநீா் வழங்கப்படுகிறது. அத்துடன், நகரில் உமா் சாலை, ஆசனாம்பட்டு சாலை, காந்தி சாலை, ஏ-கஸ்பா உள்ளிட்ட முக்கிய சாலைப் பகுதிகளிலும் கபசுர குடிநீா் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.