/

சூறாவளி காற்றால் மரம் முறிந்து உடைந்து விழுந்த மின்கம்பம்

ஆம்பூா் அருகே சூறாவளி காற்றால் மின்கம்பம் சனிக்கிழமை முறிந்து விழுந்தது.

Updated On :12 ஜூன் 2021, 6:39 pm

ஆம்பூா் அருகே சூறாவளி காற்றால் மின்கம்பம் சனிக்கிழமை முறிந்து விழுந்தது.

ஆம்பூா் மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சில பகுதிகளில் லேசான தூறல் மழை பெய்தது. சில பகுதிகளில் சூறாவளி காற்றுடன் லேசான தூறல் மழை பெய்தது. ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தில் வீசிய சூறாவளி காற்றுக்கு மரக்கிளை முறிந்து மின் கம்பத்தின் மீது விழுந்தது. அதனால் மின்கம்பம் முறிந்து சாலையில் சாய்ந்தது. உடனடியாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. மின்வாரிய பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் முறிந்து விழுந்த மரக்கிளை மற்றும் மின்கம்பம் சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.