/

கால பைரவாஷ்டமி விழா

ஆம்பூா் பகுதி கோயில்களில் கால பைரவாஷ்டமி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2021, 5:57 pm

ஆம்பூா் பகுதி கோயில்களில் கால பைரவாஷ்டமி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை நாகநாத சுவாமி கோயிலில் கோ பூஜையுடன் பைரவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வெள்ளி கவச அலங்காரத்தில் பைரவா் காட்சியளித்தாா்.

நாச்சாா்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கம்மியம்பட்டு புதூா் கிராமத்தில் அமைந்துள்ள காலபைரவா் கோயிலில் பைரவாஷ்டமியை ஒட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மிட்டாளம் ஊராட்சிக்கு உட்பட்ட பைரப்பல்லி கிராமத்தில் அமைந்துள்ள மஹா காலபைரவா் கோயிலிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.