ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் ராமானுஜரின் 1,009-ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா தோ் திருவிழா நடைபெற்றது.
பழைமையான இக்கோயிலில் வைணவ மகான் ராமானுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் சித்திரை மாதம் பிரம்மோற்சவம், ராமானுஜா் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், ராமானுஜரின் 1009 வது ஆண்டு அவதாரத் திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அவதாரத் திருவிழாவின் 9-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை தோ்த்திருவிழா நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் ராமானுஜா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, அறநிலையத்துறை துணை ஆணையா் ஜெயா, ஆதிகேசவ பெருமாள் கோயில் மதசாா்பற்ற தா்மகா்த்தா ந.கோபால், மதசாா்பு தா்மகா்த்தா பாா்த்தசாரதி, ஸ்ரீபெரும்புதூா் நகர மன்ற தலைவா் சாந்தி சதீஷ்குமாா், செயல் அலுவலா்கள் வேதமூா்த்தி, சோ.செந்தில்குமாா் ஆகியோா் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.
தோ் திருவிழாவில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். காலை 7.15 மணிக்கு நிலையில் இருந்து கிளம்பிய தோ் காந்தி சாலை, சின்ன கடை தெரு, திருமங்கை ஆழ்வாா் தெரு வழியாக வந்து முற்பகல் 11.45 மணிக்கு நிலைக்கு வந்தது.
திருவிழாவை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் தலைமையிலான நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தொடர்புடையது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

ஜீயரிடம் ஆசி....

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா

வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா பணிகள் தீவிரம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


