விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆம்பூர் அருகே கானாற்றில் வெள்ளம்: அபாயகர பாதையை நாள்தோறும் கடக்கும் பள்ளிக் குழந்தைகள்!

ஆம்பூர் அருகே பள்ளிக்கு செல்வதற்காக அபாயகர கானாற்று வெள்ளத்தை நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவிகள் கடந்து செல்கின்றனர்.

News image
ஆம்பூர் அருகே தினமும் கானாற்று வெள்ளத்தில் பயணம் செய்யும் மாணவ மாணவிகள்
Updated On :30 நவம்பர் 2021, 5:09 am

DIN

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ளது மிட்டாளம் ஊராட்சி குட்டகந்தூர். இந்த ஊரை ஒட்டி நெமிலி அம்மன் கோவில் கானாற்றின் இரு கரையிலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடங்கள் அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். குட்டகந்தூர், வன்னியநாதபுரம், கீழ்மிட்டாளம், புதுமனை, மிட்டாளம், பைரப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கன மழையால், ஊட்டல் கானாறு, கொச்சேரி கானாறு, கோனேட்டி கிணறு கானாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த மூன்று கானாறுகளும் நெமிலி அம்மன் கோயில் வழியாக கீழ்மிட்டாளம், புதுமனை வழியாக பெரியவரிகம் ஏரிக்கு செல்ல வேண்டிய தண்ணீர் இது.

Story image

கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால் தினமும் இந்த கானாற்றில் தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. இந்தப் பள்ளிக்கு வர வேண்டிய மாணவ மாணவிகள் அன்றாடம் கானாற்றுத் தண்ணீரை கடந்து பள்ளி கட்டிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கூடம் எதிரே கானாற்றில் வந்து கொண்டிருந்த தண்ணீரில் விளையாடி கொண்டிருந்த ஒரு மாணவனின் மீது ஒரு தண்ணீர் டிராக்டர் மோதி பலியான சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கானாற்றின் குறுக்கே ஆங்காங்கே குடியிருப்புகள் மற்றும் சிறு சிறு தொழிற்சாலைகள் கட்டப்பட்டதால் இப்போது இந்த காற்று தண்ணீர் பெரியவரிகம் ஏரிக்கு செல்வதில்லை ‌.

இந்த கானாறுகளின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளும், கசிவுநீர் குட்டைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. கடந்த வருடங்களில் இந்த கானாற்று பெருவெள்ளத்தில் அவை அனைத்தும் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்தன.
கொச்சேரி, ஊட்டல் வனப்பகுதி, கோனேட்டி கிணறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். இந்த கானாற்று தண்ணீரை சேமித்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயனடையும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.