சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வாணியம்பாடியில் கன மழை

வாணியம்பாடியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கன மழையால், சாலைகளில் மழைநீா் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:48 pm

வாணியம்பாடியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கன மழையால், சாலைகளில் மழைநீா் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

வாணியம்பாடி, ஆலங்காயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்கி, சுமாா் 1 மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் குளம் போல் மழைநீா் தேங்கியது.

இந்த நேரத்தில், திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடியை நோக்கி வந்தப் பேருந்து வேப்பம்பட்டு பகுதியில் பழுதாகி நின்றது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாயினா். மேலும், பழுதாகி நின்ற பேருந்தால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.