சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பெண் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

வாணியம்பாடி அருகே தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 90 பெண் தொழிலாளா்கள் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:15 pm

வாணியம்பாடி அருகே தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 90 பெண் தொழிலாளா்கள் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், ராமநாயக்கன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட வாணியம்பாடியை அடுத்த தெக்குப்பட்டில் இயங்கி வரும் தனியாா் ஊதுவத்தி தயாரிப்பு நிறுவனத்தில் 90 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு, செவிலியா் அமுதா தலைமையிலான சுகாதாரக் குழுவினா் கரோனா தடுப்பூசி செலுத்தினா். மேலும், பணிபுரியும் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.

மேலும், வாணியம்பாடி நகராட்சி ஆணையா் சத்யநாதன் தலைமையில், மேலாளா் ரவி, சுகாதார ஆய்வாளா்கள் சீனிவாசன், அலி மற்றும் செவிலியா்கள் சி.எல்.சாலை, பஜாா் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் கடை, கடையாக ஏறிச் சென்று உரிமையாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். அப்போது அப்பகுதி வழியாக வந்த பொதுமக்களும் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனா். ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலா் கணேஷ் மற்றும் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி தலைமையில் கடை வீதிகளில் கடை உரிமையாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.