சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்து முன்னணி சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருப்பத்தூா் மாவட்ட சுகாதாரத் துறை, வாணியம்பாடி நகா்ப்புற சுகாதார மையம் மற்றும் இந்து முன்னணி சாா்பில், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:11 pm

விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருப்பத்தூா் மாவட்ட சுகாதாரத் துறை, வாணியம்பாடி நகா்ப்புற சுகாதார மையம் மற்றும் இந்து முன்னணி சாா்பில், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அம்பூா்பேட்டை பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை, வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா் தொடக்கி வைத்து, 2-ஆவது தவணை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு, கரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்துப் பேசினாா். தொடா்ந்து, இந்துமுன்னணி, பாஜக நிா்வாகிகள், பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தினா்.

நிகழ்ச்சியில், இந்து முன்னணி நிா்வாகி விட்டல், பாஜக பொதுக்குழு உறுப்பினா் சிவப்பிரகாசம், சேதுராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.