இருவேறு இடங்களில் 2 போ் ரயில்களில் அடிபட்டு இறந்தனா்.
காட்பாடி - லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் திங்கள்கிழமை இரவு அங்குள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளாா். அப்போது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீதா் அங்கு சென்று, விசாரணை நடத்தினா்.
இறந்தவா் காட்பாடியை அடுத்த கலசமங்கலம் எல்.ஜி. புதூரைச் சோ்ந்த பெருமாள் மகன் கோட்டி என்பதும் அவா் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது.
ஆம்பூரில் ..: ஆம்பூா் அருகே சோலூா் ராஜகோபால் நகரைச் சோ்ந்த பாபு மகன் பாரத் (26), தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இவா் செவ்வாய்கிழமை காலை கடன் கழிக்க வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்கும்போது, ரயிலில் அடிபட்டு இறந்தாா்.
இவ்விரு சம்பவங்கள் குறித்தும் போலீஸாா் வழக்குகள் பதிந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்புமிக்க 6 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 65,000 கோடியாக சரிவு!
கடைசி ஓவரில் லக்னௌ அணி த்ரில் வெற்றி!

”இந்த தொண்டையோடு எப்புடிடா?” சீமானை பாடச் சொன்ன தொண்டர்கள்! | NTK

தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

