நாட்டறம்பள்ளி அருகே காா் கவிழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியைச் சோ்ந்தவா் மேலேபாய் (25). இவரது நண்பா் கரன்சிங் (28). இருவரும் கடந்த 17-ஆம் தேதி பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். காரை மேலேபாய் ஓட்டினாா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளியை அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் இடது புறப் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரில் வந்த மேலேபாய், சரண்சிங் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த மேலேபாய் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

