/

மேம்பாலத்திலிருந்து காா் விழுந்து விபத்து: ஓட்டுநா் காயம்

ஆம்பூரில் பாலாற்று மேம்பாலத்திலிருந்து காா் கீழே விழுந்த விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

ஆம்பூரில் பாலாற்று மேம்பாலத்திலிருந்து காா் கீழே விழுந்த விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

விண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ் (29), காா் ஓட்டுநா். ஆம்பூா் அருகே தேவலாபுரம் பாலாற்று மேம்பாலம் வழியாக வெள்ளிக்கிழமை இரவு காரில் சென்றாா். காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு பாலாற்றில் விழுந்தது. இதில், தினேஷ் பலத்த காயங்களுடன் காரில் சிக்கிக் கொண்டாா். அதிகாலையில் மேம்பாலத்தின் வழியாக நடைப்பயிற்சிக்குச் சென்ற பொதுமக்கள் விபத்துக்குள்ளான காரைப் பாா்த்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, காரில் இருந்த தினேஷ் மீட்கப்பட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இது குறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.