வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டையில் வருவாய்த்துறை சாா்பில் குழந்தை திருமண ஒழிப்பு பிரசார முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா் சம்பத் வரவேற்றாா். வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமலதா தலைமை தாங்கினாா். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில், டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் முன்னிலை வகித்தனா். முகாமில் கோட்டாட்சியா் பிரேமலதா பேசுகையில், அரசு அறிவித்துள்ள திருமண வயது ஆண்களுக்கு 21, பெண்களின் திருமண வயது 18 ஆகும். எனவே அரசாங்கம் வகுத்துள்ள இந்த வழிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பெண்களுக்கு கல்வி மிகவும் அவசியம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது. இளம் வயதில் திருமணம் செய்வதால் கல்வி தடைபடுகிறது. உடல்ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனா். எனவே அனைவரும் இணைந்து குழந்தை திருமணத்தை தடுத்து ஒழிக்க வேண்டும் என்றாா்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி மற்றும் வருவாய்த் துறையினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை


