திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அம்மன் கோயில்களில் அமாவாசை பூஜை

ஆலங்காயம் வைசியா் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வநாகாலம்மாள் கோயிலில் அமாவாசை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:36 pm

ஆலங்காயம் வைசியா் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வநாகாலம்மாள் கோயிலில் அமாவாசை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

வாணியம்பாடி அம்பூா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை வீரபத்திரா், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, விசேஷ அலங்காரத்துடன் கோயில் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

வாணியம்பாடியை அடுத்த புத்துகோயில் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.