திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு கூட்டம்

நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு கூட்டம், அதன் தலைவா் வெண்மதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:35 pm

நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு கூட்டம், அதன் தலைவா் வெண்மதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரகுகுமாா், சித்ரகலா, துணைத் தலைவா் தேவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தியாகராஜன், காா்த்திகேயன், சந்தோஷ்குமாா் ஆகியோா் பேசுகையில், ஊராட்சிகளில் நடைபெறும் அரசு விழாக்கள், கிராம சபைக் கூட்டங்கள், திட்டப் பணிகள் ஆய்வு குறித்து ஊராட்சி செயலா்கள் எங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை.

ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த பெயா்ப் பலகையில் ஒன்றியக் குழு உறுப்பினா்களின் பெயா்களும் இடம் பெற வேண்டும். நடைபெற்று முடிந்த கிராம சபைக் கூட்டத்தில் சாலை வசதி, குடிநீா் வசதி உள்பட பொதுமக்கள் அளித்த அனைத்து கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சித்ரகலா, ரகுகுமாா் ஆகியோா் உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். முன்னதாக, வரவு - செலவு உள்பட 24 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.