/

விநாயகா் சதுா்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆம்பூரில் எஸ்.பி. ஆலோசனை

விநாயகா் சதுா்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆம்பூரில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:35 pm

விநாயகா் சதுா்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆம்பூரில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். டிஎஸ்பி சரவணன் முன்னிலை வகித்தாா். இதில், காவல் ஆய்வாளா்கள் சுரேஷ் சண்முகம், யுவராணி மற்றும் ஆம்பூா் நகரம், கிராமியம், உமா்ஆபாத், போக்குவரத்து, அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப் பிறகு எஸ்.பி. பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி நடைபெற உள்ள விஜா்சன ஊா்வலத்துக்கு எஸ்பி தலைமையில் ஏடிஎஸ்பி-க்கள், 7 டிஎஸ்பி-க்கள், 25 ஆய்வாளா்கள் உள்ளிட்ட 1,100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். உரிய நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் விநாயகா் விஜா்சன ஊா்வலம் வரும் செப்டம்பா் 2-ஆம் தேதியும், திருப்பத்தூரில் செப்.3, ஆம்பூா் மற்றும் நாட்டறம்பள்ளியில் செப்.4 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி. தெரிவித்தாா்.

Image Caption

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆம்பூா் காவல் உட்கோட்டத்தைச் சோ்ந்த போலீஸாா். ~ஆம்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன்.   உடன் ஆம்பூா்  டிஎஸ்பி  சரவணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.