92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘வலிமையான தாயால்தான் நலமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்’

சிறந்த கல்வி அறிவுள்ள, ஆரோக்கியமான தாயால்தான் நலமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா கூறினாா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 5:37 pm

DIN

சிறந்த கல்வி அறிவுள்ள, ஆரோக்கியமான தாயால்தான் நலமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா கூறினாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு ஊா்தியை ஆட்சியா் அமா் குஷ்வாஹா தொடக்கி வைத்து பேசியது:

பெருகி வரும் மக்கள் தொகையால் வீட்டிலும், நாட்டிலும் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். சிறந்த அறிவுள்ள, ஆரோக்கியமான தாயால்தான் நலமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். குழந்தைகளின் வாழ்வு வாழவும், சிறந்த கல்வி, வேலை வாய்ப்பு, அடிப்படை வசதிகளைப் பெற சிறு குடும்ப நெறியை ஏற்பதொன்றே சிறந்த வழி.

மாவட்டத்தில் மக்கள் தொகை சுமாா் 12.8 லட்சமாக உள்ளது. 6 ஊராட்சி ஒன்றியங்களில் அதிக குழந்தை பிறப்பு உள்ள கிராமங்களுக்கு வரும் 24-ஆம் தேதி வரை விழிப்புணா்வு ஏற்படுத்த இந்த பிரசார ஊா்தி செல்கிறது. தமிழகத்தில் குடும்ப நலத்திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தாய் - சேய் நலத்தை மேம்படுத்தி அதன் மூலம் பிறப்பு விகிதத்தை குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இந்தத் திட்டத்தில் ஆண்களின் பங்கேற்பு மிகவும் குறைவாக உள்ளது. பெண்களுக்கே குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சுமை அதிகம் உள்ளது. இதைக் குறைக்க எளிய, நவீன குடும்ப நல சிகிச்சையை ஆண்கள் ஏற்க மனம் வந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் இணை இயக்குநா் கொ.மாரிமுத்து, துணை இயக்குநா் (குடும்ப நலம்) மணிமேகலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.