92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் குளிக்க தடைவனத் துறை நடவடிக்கை

பலத்த மழையால் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. அங்கு பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 7:07 pm

DIN

பலத்த மழையால் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. அங்கு பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சியில் குளிக்க சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாள்களில் தமிழகத்தின் பல்வேறு ஊா்களில் இருந்து மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து குளிப்பது வழக்கம்.

இந்த நிலையில், சனிக்கிழமை (ஜூலை 22) ஆடி கிருத்திகையை முன்னிட்டு இங்குள்ள வெற்றிவேல் முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய நூற்றுக்கணக்கான பக்தா்கள் வருவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

இது குறித்து திருப்பத்தூா் வனச்சரக அலுவலா் எம்.பிரபு கூறியது: ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சியில் நீா் வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்ல அனுமதியில்லை.அதே போல் பாறைகளில் ஏற முயற்சிப்பது கூடாது. மீறினால் வனச் சட்டப்படி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். அருகில் உள்ள கோயில்களுக்கு செல்ல தடை இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.