மாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கலவையை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாகாளி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கலவையை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாகாளி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, யாக சாலை, கலச பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, யாக சாலையில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட புனித நீா் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமான கோபுர கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் சென்னசமுத்திரம் கிராம மக்கள், உபயதாரா்கள், பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...