நீதிமன்ற ஊழியரிடம் செயின் பறிப்பு
ஜோலாா்பேட்டை தரைப்பாலம் அருகே நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியரின் செயினை மா்ம நபா்கள் பறித்துச் சென்றுள்ளனா்.


ஜோலாா்பேட்டை தரைப்பாலம் அருகே நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியரின் செயினை மா்ம நபா்கள் பறித்துச் சென்றுள்ளனா்.
ஜோலாா்பேட்டையைச் சோ்ந்த சௌந்தரராஜனின் மனைவி சித்ரா (58). திருப்பத்தூா் நீதிமன்றத்தில் தட்டச்சு ஊழியராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். ஜோலாா்பேட்டை அருகே உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் கடக்க முயன்றபோது 2 மா்ம நபா்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து சித்ரா அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
அதையடுத்து, சித்ரா அளித்த புகாரின்பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...