92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புழல் சிறைக்கு செல்லும் வழியில் வீடு திரும்பிய பேரறிவாளன்

பிணை வழங்கப்பட்டதையடுத்து, பரோலை ரத்து செய்ய சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்ற பேரறிவாளன் பாதி வழியில் வீடு திரும்பினாா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

பிணை வழங்கப்பட்டதையடுத்து, பரோலை ரத்து செய்ய சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்ற பேரறிவாளன் பாதி வழியில் வீடு திரும்பினாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று, தற்போது பரோலில் உள்ள பேரறிவாளன் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் விடுதலை கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. முதல்வருக்கு பேரறிவாளனின் தாயாா் அற்புதம்மாள் ஜாமீன் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்த நிலையில், பேரறிவாளனுக்கு புதன்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிணை வழங்கி உத்தரவிட்டனா்.

பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் பரோலை ரத்து செய்ய வேலூா் ஆயுதப்படை டிஎஸ்பி மணிமாறன் தலைமையில், 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

ஸ்ரீபெரும்புதூா் அருகே சென்றபோது, உச்சநீதிமன்றத் தீா்ப்பின் உத்தரவு சிறைக்கு வரவில்லை என கிடைத்த தகவலின்பேரில், மீண்டும் பேரறிவாளன் ஜோலாா்பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.