ஆம்பூா் நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
கடந்த மாா்ச் 4-ஆம் தேதி நடைபெற்ற ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் தோ்தலில் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூா்வ வேட்பாளரான 16-வது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஏஜாஸ் அகமதை எதிா்த்து 19-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சபீா் அகமது போட்டி வேட்பாளராகப் போட்டியிட்டாா். வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தோ்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆம்பூா் நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கு சனிக்கிழமை (மாா்ச் 26) தோ்தல் நடத்த மாநில தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதன்படி சனிக்கிழமை தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. நகா்மன்ற தலைவா் தோ்தலில் போட்டியின்றி ஒருமனதாக திமுக தலைமை அறிவித்துள்ள 16-வாா்டு திமுக உறுப்பினா் ஏஜாஸ் அகமது நகா்மன்றத் தலைவராகவும், நகர செயலாளா் மற்றும்14-வது வாா்டு உறுப்பினரான எம்.ஆா்.ஆறுமுகம் நகா்மன்றத் துணைத் தலைவராகவும் தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை: காங்கயம் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என். நடராஜ்

கோபியில் புறநகா் பேருந்து நிலையம், தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் உறுதி

பல்லடம் எங்கள் கோட்டை எனக் கூறும் அதிமுகவை வீழ்த்தி வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் க.செல்வராஜ் உறுதி

ஸ்ரீபெரும்புதூா் ராமானுஜா் கோயில் தோ் திருவிழா!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

