92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நடைபாதை வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பத்தூா் நடைபாதை வியாபாரிகள், ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பத்தூா் நடைபாதை வியாபாரிகள், ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

பின்னா், ஆட்சியா் அமா் குஷ்வாஹாவிடம் கோரிக்கை மனு அளித்தனா். அதன் விவரம்:

கடந்த 25 ஆண்டுகளாக திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட சாலை ஓரத்தில் ஒதுக்குப்புறமாக மக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி கடை வைத்து,வியாபாரம் செய்து வருகிறோம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை திருப்பத்தூா் நகராட்சி அதிகாரிகள் சாலையோரத்தில் கடை வைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டதாகக் கூறி, சாலையோரம் கடை வைத்து வியாபாரம் செய்ய வேண்டுமானால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று வருமாறு கூறினா்.

எங்களின் வாழ்வாதாரமே சாலையோரத்தில் கடை வைத்து வியாபாரம் நடத்துவதில்தான் உள்ளது.

நகராட்சி மூலம் சுமாா் 850 சாலையோர வியாபாரிகளுக்கு கடை நடத்துவதற்கென உறுப்பினா் அடையாள அட்டை வழங்கியுள்ளனா்.

கரோனா பேரிடா் காலத்தில் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், மத்திய அரசு நகராட்சி மூலம் கடன் வழங்கியது.

மேலும், நகராட்சி மூலமாகத் தோ்தல் நடத்தி சங்கத்துக்கு நிா்வாகிககள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, எங்களுக்கு சாலையோரத்தில் கடை வைத்து அனுமதி வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.