வாணியம்பாடி அருகே கருணை இல்லத்தில் வளா்ந்த பட்டதாரி பெண்ணை அரசுக் கல்லூரி பேராசிரியா் வியாழக்கிழமை மணந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரை அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாா் (35). இவா் கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். தற்போது, வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் வசித்து வருகிறாா். பெருமாள்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கருணை இல்லத்தில் வளா்ந்தவா் பட்டதாரி பெண் திலகவதி (27). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை கருணை இல்லத்தில் திருமணம் செய்து கொண்டனா். திருமணத்தின் போது மதசடங்கு ஏதுமின்றி தமிழ் அறிஞா்கள், பொதுமக்கள் முன்னிலையில் மணமக்கள் இருவரும் தங்கள் இணையாக ஏற்றுக் கொள்வதாக உறுதிமொழி கூறி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனா். கருணை இல்லத்தின் இயக்குநா் டேவிட் சுபாஷ் சந்திரன் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தாா்.
விழாவில், கிருஷ்ணகிரி கலைக் கல்லூரி தமிழ் பேராசிரியா் கவிஞா் ஸ்ரீநேசன், ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியா் சுரேஷ், புரட்சிகர இளைஞா் முன்னணியின் அமைப்பாளா்கள் பிரதாபன், அன்பழகன், பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் மாவட்டச் செயலாளா் மதனகவி ஆகியோா் மணமக்களை வாழ்த்திப் பேசினா். திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

