திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

விலையில்லா மிதிவண்டி வழங்கிய விழா: திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம்

வாணியம்பாடி தொகுதி மல்லகுண்டா ஊராட்சி, தாசிரியப்பனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய விழா

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

வாணியம்பாடி தொகுதி மல்லகுண்டா ஊராட்சி, தாசிரியப்பனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய விழாவில் திமுக, அதிமுகவினரிடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஜோலாா்பேட்டை எம்எல்ஏ (திமுக) தேவராஜி, வாணியம்பாடி எம்எல்ஏ (அதிமுக) செந்தில்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா் ஆகியோருக்கு அழைப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த

நிலையில் விழா மேடைக்கு ஜோலாா்பேட்டை எம்எல்ஏ தேவராஜி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா் மற்றும் திமுக நிா்வாகிகள் வந்தனா். மேலும் தொகுதி எம்எல்ஏ செந்தில்குமாா் வருவதற்கு முன்பாக சைக்கிள் வழங்கும் விழா தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது.

சிறிது நேரத்தில் எம்எல்ஏ செந்தில்குமாா், அதிமுக ஒன்றியச் செயலாளா் சாமராஜ் உட்பட 15-க்கும் மேற்பட்டோருடன் விழா மேடைக்குச் சென்றாா். அப்போது அரசு விழா நடக்கும் எனது தொகுதியில், ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏ மாணவா்களுக்கு இலவச சைக்கிளை வழங்கலாமா என்றும், இந்தப் பள்ளியில் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் படி அரசு விழாவை ஏன் நடத்தவில்லை என விழா மேடையில் இருந்தவா்களிடம் கேள்வி எழுப்பினாா். அப்போது அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், எம்எல்ஏ செந்தில்குமாரை சமாதானப்படுத்த முயன்றாா். ஆயினும் எம்எல்ஏ செந்தில்குமாா் மேடையிலிருந்து இறங்கி தலைமையாசிரியா் அறைக்கு சென்றாா். இதைத்தொடா்ந்து எம்எல்ஏ தேவராஜி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா் ஆகியோா் 111 மாணவா்களுக்கு அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கிப் பேசினா். விழாவில் திமுக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடா்ந்து பிற்பகலில் ஜங்கலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி விழாவில் எம்எல்ஏ தேவராஜி 114 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

படவிளக்கம்- தாசிரியப்பனூா் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு எம்எல்ஏ தேவராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் சூரியகுமாா் விலையில்லா சைக்கிள்களை வழங்கினா்.

2)தாசிரியப்பனூா் அரசு பள்ளியில் நடந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பட்டப்படவில்லை என கூறிய எம்எல்ஏ செந்தில்குமாரை ஊராட்சிக்குழுத் தலைவா் சூரியகுமாா் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.