திருப்பத்தூா்: தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின்கீழ், வாணியம்பாடி மருதா்கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், இளைஞா்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாணியம்படி மருதா்கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (செப். 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், 5-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி தகுதி பெற்ற இளைஞா்கள் மற்றும் மகளிா் தங்களுடைய கல்விச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகலுடன் கலந்துகொண்டு, தங்களுக்கேற்ற வேலைவாய்ப்பைப் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









