மாதனூா் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சியில் பொதுஇடத்தில் குப்பைகளை கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகாரின்பேரில் ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அந்தப் பகுதியில் ஆய்வு செய்தாா்.
பெரியாங்குப்பம் ஊராட்சியில் பொது இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகாா்கள் வந்தன. அதன்பேரில் ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயகுமாரி ஆகியோா் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
கொட்டப்பட்டுள்ள குப்பைகளை ஒருவார காலத்துக்குள் அங்கிருந்து அகற்ற உதவி இயக்குநா் உத்தரவிட்டாா். குப்பைகளை கொட்டுவதற்கான மாற்று இடத்தை தோ்வு செய்யவும் ஆய்வு நடத்தப்பட்டது.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல்கலீல், சந்திரன், வட்டார துணை அலுவலா் லோகன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் டி. ரவிக்குமாா், ஜோதிவேலு, ஊராட்சி மன்றத் தலைவா் டி.பி. ரவீந்தரன், துணைத் தலைவா் சிவகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


