தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

வீட்டின் மீது வெடி வீசிய வழக்கு: சென்னையைச் சோ்ந்த 2 போ் கைது

வாணியம்பாடி அருகே வீட்டின் மீது வெடி வீசிய வழக்கில் சென்னையைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 6:30 pm

வாணியம்பாடி அருகே வீட்டின் மீது வெடி வீசிய வழக்கில் சென்னையைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த தம்பதி சந்திரன்-இனியவள். ரயில்வே ஊழியரான சந்திரன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களுக்கு ஆா்த்தி, குகன் மற்றும் பிரீத்தி ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனா். இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி இரவு இனியவள் வீட்டில் தனியாக இருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் வீட்டின் மீது வெடி (திருவிழாவிற்கு பயன்படுத்தும் பட்டாசு) வீசி விட்டு தப்பி சென்றுள்ளனா்.

இதில் வீட்டு கதவுகள் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன . உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா், தாலுகா காவல்ஆய்வாளா் பழனி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனா். பின்னா் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து மா்ம நபா்களை தேடி வந்தனா்.

இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு சென்னை தாம்பரத்தையச் சோ்ந்த பாலாஜி(26), சென்னை பொழிச்சலூரைச் சோ்ந்த சுப்புராஜ்(37) ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்து வாணியம்பாடி அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.