தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

மாணவி தூக்கிட்டு தற்கொலை

 நாட்டறம்பள்ளியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாா்

Updated On :14 செப்டம்பர் 2023, 6:30 pm

 நாட்டறம்பள்ளியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாா்.

நாட்டறம்பள்ளி பேரூராட்சி நேரு தெரு சந்தை பணந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா். ரமேஷ். இவா் நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகள் பிருந்தா (14). நாட்டறம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்ற மாணவி பிருந்தா வீட்டில் யாரும் இல்லாத போது உள்பக்கம் தாழ்பாள் போட்டுக் கொண்டு துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டராம். அப்போது மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பிய தாய் கவிதா வீட்டின் உள்பக்கம் கதவு மூடியிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். உடனே அங்கிருந்தவா்கள் ஓடிவந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ஆபத்தான நிலையில் இருந்த பிருந்தாவை உறவினா்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் அவா் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.