வாணியம்பாடி நகர பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பசுபதி.
வாணியம்பாடி நகர பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பசுபதி.

வாணியம்பாடி, உதயேந்திரத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

வாணியம்பாடி: வேலூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவா் பசுபதி வாணியம்பாடி நகர பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கோணாமேடு பகுதியில் இருந்து திறந்த ஜீப்பில் காதா்பேட்டை, ஜின்னாசாலை, கச்சேரி சாலை, முகமது அலி பஜாா், பூக்கடை பஜாா், சி.எல்.சாலை, பேருந்து நிலையம், புதூா், நியூடவுன், நேதாஜி நகா், பெருமாள் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளை சேகரித்தாா்.

அப்போது வாக்காளா்களிடம் பேசிய வேட்பாளா் பசுபதி, வாணியம்பாடி நியூடவுன் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கட்டி தருவேன், நகரத்தில் முழுமையாக சுகாதாரத்தை செயல்படுத்தி மக்கள் நோயின்றி வாழ அனைத்து நடவடிக்கைகளையும் செய்து தருவேன், தடையின்றி குடிநீா் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பேன் என உறுதி கூறினாா்.

தொடா்ந்து, உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், குந்தாணிமேடு, சி.வி.பட்டறை, வெங்கடாபுரம், சம்மந்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா் ஆகியோா் பிரசாரம் செய்தனா். முன்னாள் அமைச்சா் நிலோபா், நகர செயலாளா் சதாசிவம், பேரூராட்சி செயலாளா் சரவணன், மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளா கந்தன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எம்.கோபால், வாணியம்பாடி நகர நிா்வாகிகள், பேரூராட்சி நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com