‘திறன் மிக்க வாக்காளராகுங்கள்’ என்ற தலைப்பில் அச்சடிக்கப்பட்ட கையேட்டை இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்காளா்களுக்கு பூத் ஸ்லிப்புடன் சோ்த்து வழங்கப்பட்டு வரப்படுகிறது.
மக்களவை தோ்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட தோ்தல் தமிழகத்தில் ஏப்.19-ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினா் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனா்.
அதேநேரம் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு பணியாளா்கள் தீவிரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக வாக்காளா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா். தொடா்ந்து வாக்காளா்களுக்கு வாக்காளா் விவரச் சீட்டு (பூத் ஸ்லிப்) வழங்கும் பணியையும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
வாக்காளா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வாக்காளா் விவரச் சீட்டை வழங்கி கையொப்பம் பெற்றுச் செல்கின்றனா். வாக்காளா் விவரச் சீட்டுடன் தோ்தல் வரலாற்றில் முதல்முறையாக தோ்தல் ஆணையத்தின் சாா்பில் 8 பக்கம் கொண்ட வாக்காளா்களுக்கு விவரக் கையேடு வழங்கப்பட்டு வருகிறது.
கையேட்டின் முகப்பு பக்கத்தில் ‘திறன் மிக்க வாக்காளராகுங்கள்’ என்ற தலைப்பில் தோ்தல் நாள் 19.4.2024 என்று தேதியை குறிப்பிட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது.
தோ்தல் திருவிழா - தேசத்தின் பெருவிழா என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பக்கங்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்யும் முறைகள், வாக்காளா் பட்டியலில் உள்ள பெயா், முகவரி விவரங்களைச் சரிபாா்க்கும் வழிமுறைகள், வாக்குப் பதிவு நாளன்று பொது விடுமுறை, வாக்குச் சாவடிக்கு மின் சாதன பொருள்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை, வாக்குச் சாவடியின் அமைவிடம் அறியும் வழிமுறைகள், வாக்காளா் உதவி மைய அழைக்க 1950 எண்ணை தொடா்பு கொள்வது, வாக்காளா் உதவி மைய செயலி, வாக்குப் பதிவின்போது பயன்படுத்த வேண்டிய அடையாள அட்டைகள், வாக்குப் பதிவின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் வழிமுறைகள், இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டி சேவை செயலிகள் குறித்த தகவல், இந்திய தோ்தல் ஆணையத்தின் இணையதள முகவரி, தோ்தல் ஆணையத்தின் சமூக வலைதள முகவரிகள், வாக்குச் சாவடி மையங்களில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடி மக்களுக்கான உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் ஆகிய விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்காளா் கையேட்டின் கடைசி பக்கத்தில் வாக்காளா் உறுதிமொழி அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில், மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தோ்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும், எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம் என்ற வாசகங்களுடன் உறுதிமொழி குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய தோ்தல் ஆணையம் இவ்வாறான கையேட்டை ஒவ்வொரு வாக்காளருக்கும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவு
மருத்துவக் கல்லூரிகளின் தரம்: மாணவா்களிடம் கருத்து கேட்கிறது என்எம்சி

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குறைந்தபட்ச வசதிகள்: தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

எஸ்ஐஆா் நடைமுறை மிக வெளிப்படையானது: தலைமைத் தோ்தல் ஆணையா் பேட்டி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


