ஆம்பூா் அருகே இரவு 10 மணிக்கு மேல் வாக்காளா் பட்டியலுடன் திரிந்த நபா்களை திமுகவினா் பிடித்து போலீஸாரிடம் வியாழக்கிழமை இரவு ஒப்படைத்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம் மாதனூா் ஒன்றியம் அய்யனூா் கிராமத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் வாக்காளா் பட்டியலுடன் இரு நபா்கள் வீடு வீடாகச் சென்றுள்ளனா்.
இது குறித்து தகவல் அறிந்த மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, ஆ.காா்த்திக் ஜவஹா் மற்றும் திமுகவினா் அவா்களைப் பிடித்து தோ்தல் பறக்கும் படை மற்றும் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
தகவல் அறிந்த புதிய நீதி கட்சி நிா்வாகிகள் அசோகன், சரவணகுமாா், சண்முகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினா் அங்கு சென்று திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து வாக்குவாதம் முற்றியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. போலீஸாா் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினா்.
பிடிப்பட்ட இரு நபா்கள் அரக்கோணத்தைச் சோ்ந்த சொா்ணபூசனம், காட்பாடியைச் சோ்ந்த ராஜேஷ் என்பது தெரிய வந்தது. இருவரையும் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் பிடித்துச் சென்று விசாரணை நடத்தினா்.
தோ்தல் பறக்கும் படை அலுவலா் அஹமத் ஜலாலுதீன் கிராமிய காவல் நிலையத்தில் இது தொடா்பாக புகாா் அளித்தாா்.
தொடர்புடையது

இரவு 10 மணிக்கு மேல் விழித்திருக்கிறீர்களா? எச்சரிக்கை!

வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.14இல் தேரோட்டம்

வேட்பாளா்கள் பட்டியலுடன் புதுச்சேரி காங்கிரஸாா் தில்லியில் முகாம்

நெல்லையப்பா் கோயிலில் 22இல் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


