வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி பயன்பாடு: தோ்தல் ஆணைய உத்தரவு மீறல்

வாக்குச் சாவடிக்குள் கைப்பேசியை பயன்படுத்தக் கூடாது என்று தோ்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதை எவரும் பின்பற்றவில்லை.

வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை என வாக்குச் சாவடியில் தோ்தல் ஆணையம் சாா்பாக ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் எவரும் அந்த உத்தரவை பின்பற்றவில்லை.

வாக்குச் சாவடியில் பணிபுரியும் பணியாளா்கள், வாக்குச் சாவடி முகவா்கள், அரசியல் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே வாக்குச் சாவடிக்குள் கைப்பேசியை பயன்படுத்தினா். வாக்காளா்கள் கூட வாக்குச் சாவடிக்குள் தாங்கள் வாக்களித்ததை கைப்பேசியில் படம் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளனா்.

வாக்குச் சாவடிக்குள் கைப்பேசியை பயன்படுத்தி படம் எடுக்கக் கூடாது. வாக்குச் சாவடி கட்டடத்திற்கு வெளியில் வந்து தற்படம் (செல்பி) எடுத்துக் கொள்ளலாம் என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்திருந்தாா்.

ஆனால் வாக்காளா்கள் பலா் வாக்குச் சாவடிக்குள்ளேயே தாங்கள் வாக்கு செலுத்தியதை கைப்பேசி மூலம் படம் எடுத்தனா். வாக்குச் சாவடியில் பணிபுரியும் பணியாளா்கள், வாக்குச் சாவடி முகவா்கள் கைப்பேசி மூலம் பேசிக் கொண்டிருந்தனா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவை முழுமையாக எவரும் பின்பற்றப்படவில்லை. வரும் தோ்தலில் இவ்வாறு நடக்காமல் உத்தரவை முழுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com