கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்
அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்ட தேர்தல் ஆணையத்தின் பத்திரத்தில் கேரள பாஜக முத்திரை

@ECISVEEP

@ECISVEEP
திருவனந்தபுரம் : கேரள பாஜக முத்திரையுடன் தேர்தல் ஆணைய பத்திரம் வெளியிடப்பட்டதை எதிர்க்கட்சிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு விமர்சித்துள்ளன.
கடந்த 2019-ஆம் ஆண்டு, மார்ச் 19-இல் அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்ட தேர்தல் ஆணையத்தின் பத்திரத்தில் கேரள பாஜக முத்திரை இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், கேரளத்தில் பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அந்த அறிக்கையை சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்ட ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியது.
அண்மையில் கேரள தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகத்துக்குச் சென்ற கேரள பாஜக குழுவினர் கடந்த 2019-இல் அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல் வேட்பாளர்களுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளில் சிலவற்றைப் பற்றி தெளிவான விளக்கம் கோரியிருந்தது.
அத்துடன், 2019-இல் வழங்கப்பட்ட வழிகாட்டல் நெறிமுறைகள் அடங்கிய நகலையும் சமர்ப்பித்தது. அந்த நகல்களில் கேரள மாநில பாஜக அலுவலக முத்திரை இடம்பெற்றிருந்ததாம்.
அதனைக் கவனிக்கத் தவறிய சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், பிற கட்சிகளுக்கும் அந்த நகல்களை அனுப்பி அந்தக் கட்சிகளுக்கும் விளக்கமளிக்க முற்பட்டிருக்கிறார்.
இது குறித்து தகவல் தெரிய வந்ததையடுத்து, அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் மேற்கண்ட பத்திரத்தை திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து கடந்த மார்ச் 21-இல் முறையாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து, இவ்விவகாரத்தில் திங்கள்கிழமை(மார்ச் 23) தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. அதில், நிர்வாக குழப்பம் காரணமாக மேற்கண்ட தவறு நடந்துவிட்டதாகவும் உடனடியாக தவறு திருத்தப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தவறுக்கு காரணமான தேர்தல் அலுவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் கேரள தலைமை தேர்தல் அலுவலர் இன்று தெரிவித்தார்.

கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...