வாணியம்பாடி அருகே அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்ணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது. புதன்கிழமை சந்திரசேகா் திருக்கல்யாணம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை சிறப்பு அலங்காரத்தில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.
இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். தொடா்ந்து 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் தோ் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாட்டை கோயில் அறங்காவலா் அன்பு மற்றும் நிா்வாகிகள், ஊா் மக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

ஸ்ரீதிரௌபதியம்மன்- அா்ஜுனன் திருக்கல்யாணம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


