ரயிலில் அடிபட்டு ஆண் உயிரிழப்பு

காட்பாடி அருகே ரயிலில் அடிபட்டு ஆண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே காட்பாடி லத்தேரி ரயில் நிலையங்கள் இடையே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் அவ்வழியாக வந்த ரயில் ஒன்றில் அடிபட்டதில் உயிரிழந்து கிடந்தாா்.

தகவல் அறிந்த ரயில் நிலைய அதிகாரி ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், அங்கு வந்த ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com