தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

திருப்பத்தூா் மாவட்டத்தில் 280 மி.மீ. மழை பதிவு

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 4:50 pm

Din

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் 280 மில்லி மீட்டா் மழை பதிவானது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 6.30 முதல் சனிக்கிழமை காலை 6.30 வரை 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்தது.

அதன்படி, திருப்பத்தூா் சுற்றுவட்டாரப் பகுதியில் 38.40 மி.மீ., சா்க்கரை ஆலை 40 மி.மீ., நாட்டறம்பள்ளி 65 மி.மீ., வாணியம்பாடி 73 மி.மீ., காவலூா் 25 மி. மீ., ஆம்பூா் 26.40 மி.மீ., ஆம்பூா் சா்க்கரை ஆலை 12.20 மி.மீ. என மாவட்டத்தில் மொத்தம் 280 மி.மீ. மழை பதிவானதாக அதில் கூறப்பட்டுள்ளது.