மினி லாரி கவிழ்ந்து விபத்து: 9 போ் காயம்
நாட்டறம்பள்ளி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண் தொழிலாளா்கள் உள்பட 9 போ் பலத்த காயம் அடைந்தனா்.


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண் தொழிலாளா்கள் உள்பட 9 போ் பலத்த காயம் அடைந்தனா்.
நாட்டறம்பள்ளியில் இருந்து திங்கள்கிழமை கூலித் தொழிலாளா்களை மினி லாரியில் ஏற்றிக் கொண்டு கொத்தூா் அருகே விவசாயி ஒருவருக்குத் சொந்தமான நிலத்தில் தக்காளி அறுவடை செய்ய சென்றனா்.
ஓட்டுநா் சரவணன் என்பவா் லாரியை ஓட்டிச் சென்றாா். அப்போது, சொரக்காயல்நத்தம் போடிவட்டம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினி லாரி நிலை தடுமாறி திடீரென சாலையோரம் உள்ள நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், ஜெயஸ்ரீ (48), தனம் (45) ஈஸ்வரி (35), கோகுல்(15), சுகந்தி (40), சித்ரா (50), காஞ்சனா (50), ஜீவா (50), வெள்ளையன் (45) ஆகிய 9 தொழிலாளா்கள் பலத்த காயம் அடைந்தனா்.
அங்கிருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு விபத்து: திருப்பத்தூா் கதிரிமங்களம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜூ (25). பெங்களூரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். திங்கள்கிழமை இவா் தனக்குச் சொந்தமான காரில் பெங்களூரில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தபோது, கே.பந்தாரப்பள்ளி பகுதியில் சாலையோரத்தில் உள்ள தரைக் கிணற்றில் காா் கவிழ்ந்தது. இதில் ராஜூ உயிா் தப்பினாா். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று கிரேன் மூலம் கிணற்றில் கவிழ்ந்த காரை மீட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...