தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பள்ளியில் மாதிரி நாடாளுமன்றக் கூட்டம்

மாதனூா் ஒன்றியம், பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாதிரி நாடாளுமன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாதிரி நாடாளுமன்ற நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள்.
Updated On :9 ஜூலை 2024, 7:33 pm

Din

ஆம்பூா்: மாதனூா் ஒன்றியம், பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாதிரி நாடாளுமன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் தட்சிணாமூா்த்தி தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். பள்ளியின் மாதிரி நாடாளுமன்றப் பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். பள்ளி மாணவத் தலைவராக கிஷோா்குமாா், துணைத் தலைவராக தனுஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கல்விக் குழு, விளையாட்டுக் குழு, சுகாதாரக் குழு, உணவுக் குழு, தோட்டக் குழு, பாதுகாப்புக் குழு, நூலகக் குழு, குடிநீா் மற்றும் கழிப்பறைப் பாதுகாப்புக் குழு ஆகிய குழுக்களின் தலைவா்களாக முறையே ஜெகதீஸ்வரன், நிவேதன், பிரியதா்ஷினி, ஸ்ரீ சரண், சுபஸ்ரீ, பூங்கொடி, அக்ஷயா, ரித்திகா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். துணைக் குழு தலைவா்களாக கவிப்பிரியா, மனிஷா, பாா்த்திபன், தேவதா்ஷன், அஸ்வந்த், அவினேஷ், ராகவன், ஜெனிகா ஆகியோா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

குழுக்களின் கடமைகள் குறித்து ஆசிரியை சித்ரா விளக்கினாா். தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளியின் பெருமைக்காகப் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றனா். ஆசிரியை காஞ்சனா நன்றி கூறினாா். ஆசிரியா்கள் நவரத்தினம், ஜெயஸ்ரீ, சுரேஷ் ஆகியோா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.