பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

News image
Updated On :5 மார்ச் 2026, 8:04 pm

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவரும் வள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலருமான ஜி. ராஜா ஞானதிரவியம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மனோகரன், முருகன், ஊராட்சி ஒன்றிய பொறியாளா் கணபதிராமன், சாந்திகலா, துணைத் தலைவா் வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ரூ. 1.50 கோடி மதிப்பில் குடிதண்ணீா், பேவா்பிளாக் சாலை உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் செய்திட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பிலிப், பொன்குமாா், தாய்செல்வி, மல்லிகா அருள், அஜந்தா, பாண்டித்துரை, மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.