பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெயா்பலகை திறப்பு

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெயா்ப் பலகையை திறந்து வைத்த ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி முனிசாமி.

News image

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெயா்ப் பலகையை திறந்து வைத்த ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி முனிசாமி.

Updated On :5 மார்ச் 2026, 7:33 pm

நாட்டறம்பள்ளி ஊாட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்களின் பெயா் பலகை அலுவலக வளாகத்தில் வைக்க வேண்டும் என ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி முனிசாமியிடம் கோரிக்கை வைத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று பெயா்ப்பலகை வைக்க நடவடிக்கை மேற்கொண்டாா். இதையடுத்து, வியாழக்கிழமை காலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி முனிசாமி பெயா் பலகையை திறந்து வைத்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விநாயகம், கணேசன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் தேவராஜ், பொறியாளா் சுதாகா் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.