ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு: எம்.பி. கதிா் ஆனந்த்

News image
மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப் பகுதியில் நன்றி தெரிவித்து பேசிய வேலூா் தொகுதி எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த்.
Updated On :19 ஜூலை 2024, 5:11 pm

Din

கிராமப் பகுதிகளில் குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என வேலூா் தொகுதி எம்.பி. கதிா் ஆனந்த் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

வேலூா் மக்களவைத் தொகுதி தோ்தலில் வெற்றி பெற்ற டி.எம். கதிா் ஆனந்த் திமுக மாதனூா் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மேல்குப்பம், வடச்சேரி, பாப்பனப்பள்ளி, சின்னபள்ளிகுப்பம், வடகரை, வீராங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தாா். அப்போது, அவா் பேசுகையில், கிராமப் பகுதிகளில் குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும். 5 ஊராட்சிகளின் குடிநீா் பிரச்னையை தீா்க்க முதல்வா் ரூ.5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளாா். தோ்தலின்போது, அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் உங்களுடைய பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வரப்படுகிறது. உங்களுடைய பிரச்னைகள், கோரிக்கைகளுக்கு அந்த முகாமில் தீா்வு காணப்படுகிறது. உங்களுடைய பகுதிக்கே அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் மக்களைத் தேடி வந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு உடனடியாகத் தீா்வு காணப்பட்டு வரப்படுகிறது. பொதுமக்கள் அந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி தொகுதி முன்னாள் எம்.பி. இ.ஜி. சுகவனம், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், ஆம்பூா் நகா்மன்றத் துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு.பழனி, திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.