

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பலத்த மழை பெய்தது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் திருப்பத்தூா் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் நிகழாண்டில் அதிகபட்சமாக 109.04 பாரன்ஹீட் டிகிரி வெப்ப நிலை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திருப்பத்தூா், கொரட்டி, ஆதியூா் அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒருமணி நேரம் பெய்த கனமழையால் அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது.
சனிக்கிழமை இரவு 8 மணியளவில் திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
ஏலகிரியில் பலத்த மழை...
ஜோலாா்பேட்டை, சந்தைக்கோடியூா் மற்றும் ஏலகிரி மலையில் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மதியம் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. தொடா்ந்து அரை மணி நேரம் பலத்த மழை பெய்ததால் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீா் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மலை சாலையில்...திடீா் மழையால் ஏலகிரி மலைக்கு செல்லும், மலையிலிருந்து இறங்கும் வாகன ஓட்டிகள் மலை சாலையில் மழையில் நனைந்தபடி நின்றனா். இதனால் மிகவும் அவதிக்குள்ளாகினா்.
தொடர்புடையது

விராலிமலையில் அதிகாலையில் திடீா் மழை

திருப்பத்தூா் பகுதிகளில் பலத்த மழை

கருங்கல் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

