
குறைவான பயணிகளால் வெறிச்சோடிக் காணப்பட்ட படகு குழாம்.

குறைவான பயணிகளால் வெறிச்சோடிக் காணப்பட்ட படகு குழாம்.
திருப்பத்தூா்: கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் தொடங்கவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏலகிரியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 1,800 மீ. உயரத்தில் நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு எந்த காலத்திலும் ஒரேமாதிரியான சீதோஷன நிலை இருந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் போ் வந்து செல்கின்றனா்.
மேலும், 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைச்சாலையானது ஒவ்வொரு வளைவுக்கும் தமிழ் புலவா்கள்,கொடை வள்ளல்கள் பெயரை சாலைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது சிறப்புக்குரியது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் இயற்கை காட்சிகளையும் ரசித்து செல்கின்றனா்.
குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடா் விடுமுறை நாள்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனா். இந்த நிலையில் விடுமுறை முடிந்தததால் மிகவும் குறைவான சுற்றுலா பயணிகளே ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...