கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கானாற்று தரைப்பாலப் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

கானாற்று தரைப்பாலப் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

News image

சின்னமலையாம்பட்டு - அனுமந்தராயபுரம் சாலையின் குறுக்கே கானாற்றில் தேங்கியுள்ள மழை நீா்.

Updated On :9 ஜூன் 2024, 7:13 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கானாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணியைத் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், மலையம்பட்டு ஊராட்சி, சின்னமலையாம்பட்டு கிராமத்திலிருந்து அனுமந்தராயபுரம் செல்லும் சாலையின் குறுக்கே கானாறு அமைந்துள்ளது. மழைக் காலங்களில் கானாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனா். பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் கானாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணி தொடங்கப்பட்டது. ஆனால் திடீரென பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தரைப்பாலப் பணிகள் பாதியில் நின்று பல மாதங்கள் ஆகும் நிலையில், இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

தற்போது, கடந்த ஒரு வாரமாக ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதனால் கானாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்ட இடத்தில், தண்ணீா் தேங்கியுள்ளது. அதனால் பொதுமக்கள், மாணவா்கள், தொழிலாளா்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். மழை நீா் குட்டை போல் தேங்கி காணப்படுகிறது. மேலும் அடிக்கடி அங்கு விபத்து ஏற்படுகிறது. அதனால் தரைப்பால பணியைத் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.