நடந்து சென்ற பெண் மீது காா் மோதியதில் உயிரிழப்பு
நடந்து சென்ற பெண் மீது கார் மோதியதில் பரிதாப உயிரிழப்பு


நாட்டறம்பள்ளி அருகே நடந்து சென்ற பெண் மீது காா் மோதிய விபத்தில் பலியானாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த அம்மணாங்கோயில் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி பூங்கொடி (50). இவா் செவ்வாய்க்கிழமை இரவு புதுப்பேட்டையில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற காா் பூங்கொடி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பூங்கொடி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக இறந்தாா்.
இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் கோணாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சந்துரு (38)என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...