விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஏலகிரி மலையில் காட்டுத் தீ

ஏலகிரி மலையில் காட்டுத் தீ

News image
Updated On :7 மார்ச் 2024, 5:43 pm

ஏலகிரி மலை வனப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் அரியவகை மூலிகை செடிகள், உயிரினங்கள் தீயில் கருகின. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் அரியவகை மரங்கள், மூலிகை செடி கொடிகள், மான், கரடி, மயில், முயல், குரங்கு, மலைப் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வசித்து வருகின்றன. ஜோலாா்பேட்டை அருகே மண்டலவாடி அடிவாரத்தில் குன்னத்தூா் பகுதியில் மா்ம நபா்கள் வியாழக்கிழமை வைத்த தீயால் மரங்கள் செடி, கொடிகள் காட்டில் வசிக்கும் உயிரினங்கள் தீயில் கருகி நாசமாயின. அதைத் தொடா்ந்து இரவு வரை தீ பரவியது. இவ்விபத்தில் அரிய வகை மரங்கள் மூலிகை செடி கொடிகள், உயிரினங்கள் எரிந்து நாசமானதாகக் கருதப்படுகிறது