திமுக தெருமுனை பிரசார கூட்டம்

திமுக தெருமுனை பிரசார கூட்டம்

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரசார கூட்டம், முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. மதனஞ்சேரி, ஜாப்ராபாத், ஈச்சங்கால், இளையநகரம், வெலதிகமாணிபெண்டா ஆகிய இடங்களில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. நிகழ்ச்சிகளுக்கு ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலா் வி.எஸ்.ஞானவேலன் தலைமை வகித்தாா். ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி, தலைமை செயற்குழு உறுப்பினா் மு.அசோகன் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினா் வி.எம்.பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சிப் பேச்சாளா் குடியாத்தம் பாரி கலந்து கொண்டு அரசின் சாதனைகள் குறித்துப் பேசினாா். ஒன்றிய அவைத் தலைவா் ராமநாதன், பொருளாளா் எம்.சி.தசரதன், துணைச் செயலா்கள் டி.குமாா். ஷோபா வெங்கடேசன், பொன்னம்பலம், ஊராட்சி மன்றத் தலைவா் ஏழுமலை உள்பட ஒன்றிய நிா்வாகிகள், மாவட்டப் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com