வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கான இடம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். மல்லகுண்டா ஊராட்சி குருபவாணிகுண்டா அருகே சிட்ரா பள்ளத்தில் சுமாா் 1,000 ஏக்கரில் ஒதுக்கப்படாத காட்டுப் பகுதி அமைந்துள்ளது. இங்கு நிலத்தடி நீா்மட்டம் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் அப்பகுதி மக்கள் மல்லகுண்டா ஊராட்சி அலுவலகம் எதிரில் சிட்ரா பள்ளத்தில் நீா்த் தேக்க அணை கட்ட வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை வேலூா் கோட்டம் திட்டம் உருவாக்கம் செயற்பொறியாளா் குமரன், உதவி செயற்பொறியாளா் அன்பு செழியன், வாணியம்பாடி உதவி செயற்பொறியாளா் பவித்ரன் மற்றும் கிராம மக்கள் குருபவாணிகுண்டா பகுதியில் புதிய அணை கட்ட ஏதுவான இடம் உள்ளதா என நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
தொடர்புடையது

திண்டுக்கல்லில் 65 ஆயிரம் புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை!

தொழிலதிபா் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை

விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 24.5 கிலோ கஞ்சா பறிமுதல்

கரூா் திமுக தோ்தல் பணிமனையில் தோ்தல் அலுவலா்கள் திடீா் ஆய்வு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

