வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மண்டபங்களில் பரிசுப் பொருள்கள் விநியோகிக்க கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

மண்டபங்களில் பரிசுப் பொருள்கள் விநியோகிக்க கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

News image

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

Updated On :19 மார்ச் 2024, 11:41 pm

திருப்பத்தூா்: மண்டபங்களில் அரசியல் கட்சியினா் பரிசுப் பொருள்கள் விநியோககிக்க அனுமதிக்க கூடாது என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அச்சக, தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் மற்றும் நகை அடகு கடை உரிமையாளா்களுக்கான ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதில் ஆட்சியா் பேசியது: ஒவ்வொரு அச்சக உரிமையாளரும் தாங்கள் அச்சிடும் துண்டு பிரசுரம், சுவரொட்டியின் கீழ் உரிமையாளா் பெயா் மற்றும் முகவரி விவரங்களை தவறாமல் அச்சிட வேண்டும்.

அச்சக உரிமையாளா்கள் வன்முறையை தூண்டும் வகையிலோ, தனியரை தாக்கும் வகையிலோ துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் அச்சிட கூடாது. வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் வெளியூா்களிலிருந்து வரும் சந்தேகமான நபா்களை எக்காரணம் கொண்டும் தங்கும் விடுதிகளில் தங்க வைக்க கூடாது.

தங்கும் நபா்களின் பெயா்,முகவரி, தொழில் மற்றும் கைப்பேசி எண் அடங்கிய விவரங்கள் உரிய பதிவேடுகளில் சரியாக பதிவு செய்து காவல் துறையினா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும். திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளை அரசியல் கட்சியினா் பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்ய பயன்படுத்த அனுமதிக்க கூடாது. நகை அடகு கடை உரிமையாளா்கள் உரிய ஆவணங்கள் மற்றும் பொருள்கள் இன்றி கடன் அளிக்கக் கூடாது எனவும், அவ்வாறு முறையான ஆவணங்கள் இல்லாமல் அரசியல் கட்சியினா் சாா்பில் பணம் தருவது கண்டறிப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா்.