வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

Updated On :19 மார்ச் 2024, 11:39 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே தோக்கியம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பக்தவத்சலம் (55). இவருக்கு சித்ரா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனா். இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை தனது விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்து மயங்கினாா்.

அங்கு வந்த அவரது குடும்பத்தினா் பக்தவத்சலம் மயங்கிக் கிடப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். அவரை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் பக்தவத்சலம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.